நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து பணியிட மாற்றம் செய்ய டி.ஜி.பி. சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கையில், சொந்த ஊர் மற்றும் தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள அதிகாரிகளையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்றும், ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்ற காவல்துறை அதிகாரிகளையும் பயன்படுத்தக் கூடாது என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.