விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் இன்று சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றுவருவதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் தேவேந்திர குல சமூகத்தை சேர்ந்தவர்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன் படி, நாங்குநேரி கீழப்பாட்டம் பகுதியில் உள்ள தேவேந்திர குல சமூகத்தினர் ஓட்டுபோடவில்லை என தெரியவருகிறது. மேலும் அரிய குளம், உன்னங்குளம், கல்லத்தி ஆகிய பகுதிகளில் அச்சமூக மக்கள் ஓட்டுபோடவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஆனால் களக்காடு, தருவை ஆகிய பகுதிகளில் பெருமளவு தேவேந்திர குல சமுதாயத்தினர் ஓட்டு போட்டதாகவும் தெரியவருகிறது. இதனால் நாங்குநேரி பகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளிலும் மிகவும் குறைந்த அளவே வாக்குப்பதிவு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.