அக்டோபர் 20 தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!

ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (13:11 IST)
அக்டோபர் 18 அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்திற்கு மழை.


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும், நாளையில் பல மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 18 அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் மேலடுக்கு சுழற்சி அக்டோபர் 20 ஆம் தேதி காற்றழுத்த பகுதியாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மிக கனமழையும், கர்நாடகாவில் சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்