கோட்டயம் அரசு மருத்துவமனையில் பத்மா உடல் வைக்கப்பட்டுள்ளது. உறவு முறையை உறுதி செய்ய அவரது மகன்களிடம் மரபணு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், பிள்ளைகளிடம் உடல் ஒப்படைக்கப்படவில்லை. அதற்கான காரணத்தை தெரிவிக்க கேரள அரசு மறுக்கிறது!
இறந்த முன்னோரின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து கண்ணியமாக வழியனுப்பி வைப்பது தமிழர்களின் வழக்கம். அதை நிறைவேற்ற உதவும் வகையில் பத்மாவின் உடலை அவரது சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் எர்ரபட்டிக்கு கொண்டு வர தமிழக, கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்