தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய்: ரசிகர்கள் கோஷத்தால் பரபரப்பு!

ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (10:00 IST)
தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய் என ரசிகர்கள் கோஷமிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தளபதி விஜய் தற்போது கோலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் நிலையில் அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் தமிழக அரசியலுக்கு வருவாரா அல்லது புதுச்சேரி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இந்த நிலையில் அடுத்த பொதுத் தேர்தலின் போது கண்டிப்பாக விஜய் அரசியலுக்கு வந்து நேரடியாக போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்தை இன்று விஜய் ரசிகர்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி விஜய் வாழ்க என அவர்கள் கோஷமிட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்