Yes Bank-ஐ தொடர்ந்து நிதி சிக்கலில் KVB... உண்மை என்ன??

வெள்ளி, 13 மார்ச் 2020 (10:56 IST)
தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வரும் நிலையில் அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டது.   
 
மேலும், ஏப்ரல் 3 ஆம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  மேலும், வாடிக்கையாளர்களுக்கு பணம் எடுப்பதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் தற்போது தளத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், மற்ற தனியார் வங்கிகளுக்கு, இதே நிலை ஏற்படக்கூடும் என வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை தனியார் வங்கிகளில் இருந்து எடுத்து வருகின்றனர். எனவே இதற்கு முடிவு கட்டும் வகையில் தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கி தகவல் ஒன்ரை வெளியிட்டுள்ளது. 
 
அதில், கடந்த 1916 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எங்கள் வங்கி சிறந்த மூலதனத்தை கொண்டு லாபகரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதற்காக சேவையாற்றுவதில் உறுதிபட உள்ளோம். வாடிகையாளர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்