''டெல்லி அதிகாரம்''- மத்திய பாஜக அரசு சட்டம் நிறைவேற்றம்

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (21:11 IST)
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான  ஆம் ஆத்மி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, சில சட்ட திருத்தங்கள் மேற்கொண்டு  துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என்று சட்டம் இயற்றியது.

இந்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில்  உள்ள நிலையில்,  இதற்கான சட்ட மசோதாவை இன்று மக்களவையில்  நிறைவேற்றப்பட்டது.

இந்த  நிலையில், மாநிலங்களவையிலும் இச்சட்டம் நிறைவேற தேசிய ஜன நாயக கூட்டணி அரசுக்கு  புஜூ ஜனதா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்