தமிழக அரசை டெல்லியில் இருந்து சிலர் இயக்குகின்றனர்: துஷ்யந்த் தவே அதிரடி வாதம்!

புதன், 20 செப்டம்பர் 2017 (13:12 IST)
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தொடர எதிர்ப்பு தெரிவித்து வந்த 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடந்து வருகிறது.


 
 
இந்த விசாரணையில் தினகரன் தரப்பு அதிரடி வாதங்களை முன் வைத்து வருகிறது. தினகரன் தரப்பு வாதங்களை முன் வைக்க முன்னாள் சட்ட அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித் மற்றும் துஷ்யந்த் தாவே களம் இறங்கியுள்ளனர்.
 
இந்த வாதத்தின் போது துஷ்யந்த் தவே தினகரன் தரப்புக்கு ஆதரவாக பல எதிர்பாராத வாதங்களை அதிரடியாக வைத்து வருகிறார். சபாநாயகர் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது இயற்கை நீதிக்கு எதிரானது. எடியூரப்பா விவகாரத்தில் அளிக்கப்பட்ட அதே போன்ற கடிதம் தான் தற்போதும் ஆளுநரிடம் அளிக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் ஒரு சார்பாக நடந்து கொண்டார். அவர் பொதுவான நபராக இல்லாமல் கட்சி சார்பாக நடந்து கொண்டார்.
 
தங்கள் எம்எல்ஏக்கள் எந்த கட்சியிலும் செல்லவில்லை. கடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இதே அதிமுகவுக்கு வாக்களித்து ஆட்சியை காப்பாற்றிய உண்மையான அதிமுகவினர். நாங்கள் அதிமுகவை விட்டு விலவில்லை, முதல்வரை மட்டும் தான் மாற்ற கோரிக்கை வைத்தோம். ஆனால் கட்சி தாவல் தடை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றார்.
 
இந்த வாதங்களை தவிர துஷ்யந்த் தவே சில அதிரடி வாதங்களை வைத்துள்ளார். தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழல் டெல்லியில் உள்ள சிலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள சிலரால் தமிழக அரசு இயக்கப்படுகிறது என கூறி அதிர்ச்சியளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்