கரூரில் கூட்ட நெரிசலில் மக்கள் பலியான நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது தவெகவினர் கடமை என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து துபாய் சென்றிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று கரூர் வந்தடைந்து இறந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பேசிய அவர், பிரச்சாரத்திற்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய கடமை தவெகவினருக்கும் உள்ளது என்றும், முதலில் தலைவர்கள் குறித்த நேரத்தில் பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K