தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த மூன்று மணி நேரங்களில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 400 கிலோ மீட்டரும், நாகப்பட்டினத்திலிருந்து 310 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்றிரவு 7 மணி முதல் கனமழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.