தமிழக அரசியலில் இனி பிராமணர்களுக்கு இடம் இல்லை… கமல்ஹாசனின் சகோதரர் கருத்து!

புதன், 12 மே 2021 (08:14 IST)
கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சாருஹாசன் தமிழக அரசியலில் இனி பிராமணர்களுக்கு இடம் இல்லை எனக் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியில் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவரின் தோல்வி பற்றி பேசியுள்ள கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சாருஹாசன்’இது திராவிட பூமி. இனி தமிழக அரசியலில் பிராமணர்களுக்கு இடம் இல்லை’ எனக் கூறியுள்ளார்.

மேலும் ‘பிராமணர்கள் வேண்டுமானாலும் கலெக்டர் ஆகலாம். ஆனால் அரசியலில் எதிர்காலம் இல்லை. கமல்ஹாசன் தோல்விக்கு பாதி காரணம் சாதியும்தான்.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்