ஏற்கெனவே அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதாகவும் இந்த காற்றழுத்த பகுதி ஒருசில மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வங்கக்கடலிலும் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தோன்றியுள்ளதால் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிரது
ஏற்கனவே வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், புதுவை, கேரளா ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது