தேனி வீரபாண்டி திருவிழா 8- வில் ஆறாம் நாள் தேர்த்திருவிழா விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த திருவிழாவிற்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பக்கத்து மாவட்டங்களான திண்டுக்கல் மதுரை விருதுநகர் ஆகிய பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த திருவிழாவை ஒட்டி தேனி வீரபாண்டி பகுதி முழுவதும் அங்கங்கே தற்காலிக கடைகள் முளைத்து இருக்கின்றது.
இதோடு நிரந்தரக் கடைகளும் இருக்கின்றன.
இதில் வீரபாண்டிய அடுத்து உப்பாரப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அம்மன் ரிலாக்ஸ் ஹோட்டலில் வாடிக்கையாளர் புரோட்டா சாப்பிட்டபோது பாத்திரம் விளக்கும் கம்பிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கடை உரிமையாளர்களிடம் கேட்டபோது, கூட்டத்துல கண்டுக்காம போங்க என்று அலட்சியமாக பதில் அளித்தனர். இதைக் கேட்ட வாடிக்கையாளர்கள் கடையில் வேலை பார்க்கும் வேலை ஆட்களிடமும், உரிமையாளரும் நீங்கள் இந்த இடத்தை காலி செய்தால் நன்றாக இருக்கும் என்று எச்சரித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இப்படி செய்கிறார்களே வாடிக்கையாளர் வேதனையோடு புலம்ப, அருகில் இருந்த வாடிக்கையாளர்கள் அம்மன் ரிலாக்ஸ் ஹோட்டல் உரிமையாளரையும், வேலை ஆட்களையும் சத்தம் போட்டு விட சிறிது நேரம் பரபரப்பு கிளம்பியது