இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின் மீது மோதிக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணிக்க பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அரசு பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.