தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்: கலெக்டர் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (16:51 IST)
தாழ்வான பகுதிகள் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருவதாகவும் நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  
 
மேலும்  ஆற்றில் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், இடி மின்னல் கனமழை ஏற்படும்போது திறந்தவெளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என்றும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ்நிற்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் மழைநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம் என்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  
 
மேலும் ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பொதுமக்கள் பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் பேரிடர் காலங்களில் டார்ச் லைட் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்