குற்றப் பின்னணி உள்ளவர்கள் மகிழ்ச்சி- இனி தேர்தலில் நிற்கலாம்

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (12:17 IST)
குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் நிற்கத் தடை விதிக்க முடியாதென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குற்றப் பின்னணி உள்ளவர்களே தேர்தல்களில் அதிகமாக போட்டியிடுகின்றனர். அதனால் மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக குற்றவாளிகளையே தேர்ந்தெடுக்க நேர்கிறது. அதை தடுப்பதற்காக குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிற்பதைத் தடை செய்யும் விதமாக பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்  ’அரசியலில் ஊழல் அதிகரித்து வருவது வருத்தமாக உள்ளது. குற்றப்பத்த்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டாலே ஒருவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார். குற்றப்பின்னணி உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்தாமல் அடிப்படை நாகரிகத்தை அரசியல் கட்சிகள் கடைப் பிடிக்க வேண்டும். அதற்கு தடை விதிக்கும் இடத்தில் நீதிமன்றம் இல்லை. நாடாளுமன்றம்,சட்டமன்றம் போன்றவற்றின் மூலமே சட்டதிருத்தம் செய்து இதற்கான தடையைக் கொண்டுவரலாம்’ என்று கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்