எந்த வருடமும் இல்லாமல் இந்த ஆண்டு தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அதன்படி தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும் மாலை 7 முதல் 8 மணு வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். இந்த தீர்ப்பால் பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என போலீஸார் எச்சரித்திருந்தனர்.