தமிழகத்தில் கொரோனா ஃப்ரீ மாவட்டங்கள் எவை தெரியுமா?

புதன், 13 மே 2020 (16:06 IST)
தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளது. 
 
மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தலைநகரான சென்னையில் மட்டும் பாதிப்புகள் 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 
 
சென்னையில் இதுவரை மொத்தமாக 4,882 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 814 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக ராயபுரத்தில் 828 பாதிப்புகளும், கோடம்பாக்கத்தில் 796 பாதிப்புகளும், திருவிக நகரில் 622 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. 
 
இந்நிலையில் இன்று கொரோனா இல்லாத மாவட்டமாக நாமக்கல் மற்றும் கோவை மாறியுள்ளது. இதனை அம்மாவட்ட ஆட்சியர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதேபோல கொனோனா தொற்று இல்லாத மாவட்டங்களும் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்