பாகிஸ்தானைச் சேர்ந்த எட்டு பேர் போதைப்பொருள் கடத்தியதாக மும்பை காவல் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த எட்டு பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய கடல் பகுதியில் பாகிஸ்தான் படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதில் 232 கிலோ போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த படகில் இருந்த 8 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில், தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் எட்டு பாகிஸ்தானியர்களுக்கும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.