தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் வீடியோ வெளியிட தடைக்கோரி நீதிமன்றத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் டெண்டர் முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி தனக்கு எதிராக அறப்போர் இயக்கம் வீடியோ வெளியிடாமல் இருக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.