திருவேற்காடு கோயிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் தர்ம கர்த்தா.. நீதிமன்றம் கடும் கண்டனம்..!

Siva
வியாழன், 17 அக்டோபர் 2024 (14:56 IST)
திருவேற்காடு கோயிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் தர்ம கர்த்தாவுக்கு கடும் கண்டனம் எழுந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருவேற்காடு கோயிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் தர்ம கர்த்தா உள்பட ரீல்ஸ் வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கோவில் வளாகத்துக்குள் ரீல்ஸ் வீடியோ எடுத்தால் சாமிக்கு என்ன மரியாதை?  சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
மேலும் சாமி மீது பயம் வேண்டாமா? - இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கூறிய உயர் நீதிமன்றம்  நீதிபதி பெண் தர்மகர்த்தா உள்ளிட்டோருக்கு எதிராக   நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.
 
சாமி படத்துக்கு கீழ் இருக்கையை போட்டு வடிவேலு காமெடியை ரீல்ஸாக எடுத்து பதிவிட்டுள்ளார் என்ற மனுதாரர் குற்றச்சாட்டு பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்