சோதனை பத்தாது? ஒரு லட்சமாக மாற்றுங்கள்! ராகுல் காந்தி கருத்து!

திங்கள், 27 ஏப்ரல் 2020 (07:55 IST)
இந்தியாவில் நாளொன்றுக்கு நடக்கும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த 32 நாட்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26,917 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை இந்தியாவில் 826 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப் பட்டாலும் நாளுக்கு நாள் புதிய நோயாளிகள் அதிகரித்த வண்ணமே உள்ளனர்.

மேலும் ஊரடங்கை அமல்படுத்தினாலும் அதைப் பயன்படுத்தி அதிகளவில் கொரோனா பரிசோதனைகளை செய்யாவிட்டால் எந்த பலனும் இல்லை என எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. இந்தியாவில் இப்போது தினமும் 40,000 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராகுல் காந்தி ‘கொரோனாவை எதிர்கொள்ள மிகப்பெரிய அளவில் பரிசோதனை செய்வதுதான் ஒரே வழி என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். தற்போது நாளொன்றுக்கு மேற்கொள்ளப்படும் 40,000 பரிசோதனைகளின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக அதிகரிக்க வேண்டும். இதற்கான பரிசோதனை கருவிகள் போதுமான அளவில் இருக்கின்றன. ஆனால் சோதனை செய்வதற்குத் தடையாக இருக்கும் விஷயங்களை மத்திய அரசு சரி செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்