அறிகுறிகளே இல்லாமல் நோய் தொற்று: திணறும் அரசு!

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (13:28 IST)
கொரோனா பாதிப்பில் வெறும் 12% பேருக்கு மட்டுமே அறிகுறிகள் இருந்தது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 
 
நேற்று தமிழகத்தில் 805 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது.  
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 805 பேர்களில் சென்னையில் மட்டும் 549 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால்  சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளதாவது, ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் வெறும் 12% பேருக்கு மட்டுமே அறிகுறிகள் இருந்தது. மீதமுள்ளோருக்கு அறிகுறி இல்லாமல் நோய் பரவுகிறது. 
 
தமிழகத்தில் தான் உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது, 41 முதல் 60 வயது உள்ளவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் தலா 46.5% உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்