கொரோனா பாதித்தவர்களுக்கு வீடுகளில் சிகிச்சை! – தமிழக அரசு அதிரடி முடிவு!

செவ்வாய், 5 மே 2020 (13:32 IST)
கொரோனா அறிகுறிகள் இல்லாமலே பாதிக்கப்பட்டவர்களை அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஒரு மாத காலத்திற்கும் மேலாகி விட்ட நிலையில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு உள்ளவர்களில் 80% பேருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படாமலே பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் அறிகுறிகள் இல்லாமலே கொரோனா பாதிப்பு உள்ளவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரும் அவரை கவனித்து கொள்பவரும் ஜிங்க் 20 எம்ஜி, விட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும்., நிலவேம்பு, கபசுரகுடிநீரை 10 நாட்களுக்கு பருக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்