மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு சுயதொழில் பயிற்சிகள்

சனி, 5 ஆகஸ்ட் 2023 (20:05 IST)
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவனை கிராமம். வ. வேப்பங்குடியில் இன்று பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு நரேந்திரன் கந்தசாமி அவர்களின் அறிவுறுத்தலின் படியும், திரு.மு கந்தசாமி அவர்கள் வரவணை ஊராட்சி மன்ற தலைவர் அவர்களின் ஆலோசனைபடியும் செம்பருத்தி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக சுயதொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

 அதன் தொடர்ச்சியாக திருச்சியில் இருந்து திருமதி.

நிர்மலாதேவி சுயதொழில் அனைத்து விதமான சிறப்பு பயிற்சி வழங்குபவர் அவர்களை வரவழைத்து  இன்று வேப்பங்குடியில் பூண்டு ஊறுகாய், வாழைத்தண்டு ஊறுகாய் , காளான் ஊறுகாய், பெரு நெல்லி ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பெரண்டை ஊறுகாய், எலுமிச்சம் பழம் ஊறுகாய், தக்காளி ஊறுகாய்   என அனைத்து விதமான ஊறுகாய் சொல்லிக் கொடுக்கப்பட்டு செம்பருத்தி குழுவினர் மற்றும் அல்லாது ஆண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

பெண்கள் தொழில் முனைவோர்களாக முன்னேறுவதற்கு சிறு தொழில் பயிற்சி, பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்குவதன் மூலமாக எதிர்கால சமூகத்தை வளமான வகையில் கட்டமைக்க பொருளாதாரத்தில் முன்னேற வழி வகுக்கும் இதனால் தண்ணீரைவு பெற்ற குடும்பங்கள் உருவாகி, நிலையான வருமானம் மற்றும் நீடித்த வளர்ச்சியடைந்து சமூகத்தில் மறுமலர்ச்சி உருவாகும் இவர்களின் வாழ்வாதாரத்தை பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் இவர்களுக்கு இன்னும் பல விதமான பயிற்சிகளை அளிக்க மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறது பயிற்சில் கலந்து கொண்ட செம்பருத்தி  குழுவினர் திருமதி கீதா, மலர்விழி, பரமேஸ்வரி, ஜெயப்பிரியா, முனியம்மாள் ,பருவதம், மேகலா , முத்தமிழ் செல்வி . இவர்களுக்கு பசுமை க்குடி தன்னார்வ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு நரேந்திரன் கந்தசாமி அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்திற்கு செம்பருத்தி  குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்