நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணியை சேர்ந்த துரைமுருகன், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் டிக்டாக் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளார். இந்த வீடியோ வைரலானதோடு சர்ச்சையும் ஆகியுள்ளது.
எனவே, இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி துரைமுருகனை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.