ஓட்டுநர், நடத்துநர் தேர்வு செய்ய முடிவு: தமிழக அரசு அரசாணை..!

செவ்வாய், 25 ஜூலை 2023 (15:41 IST)
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிய ஓட்டுனர் மற்றும் நடத்துநர் ஆள் எடுக்கும் பணி  தொடங்க உள்ளதாக  தமிழக அரசு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
 
அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஓட்டுனர் நடத்துநர் தேர்வு செய்ய சற்று முன் அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் கும்பகோணம் சேலம் கோவை மதுரை நெல்லை ஆகிய போக்குவரத்து கழகங்களுக்கு 812 பேரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
மேலும் ஓட்டுநர் நடத்துநர் தேர்வு செய்து விரைவில் பணி நியமனம் செய்ய போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளதால்  ஆள் பற்றாக்குறை விரைவில் தீரும் என்று கூறப்படுகிறது. 
 
தமிழக அரசு போக்குவரத்து துறைகளில் கடந்த சில ஆண்டுகளாக ஓய்வு பெற்றவர்களுக்கு மாற்றாக புதிய  ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்ததை அடுத்து தற்போது இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்