மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ட்விட்டர் பக்கம் ஹேக்! தொடர்பில்லாத பதிவுகளால் பரபரப்பு!

திங்கள், 26 டிசம்பர் 2022 (17:40 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் திடீரென மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டு உள்ளது. இதனை அடுத்து இதனை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
 
மேலும் இந்த ட்விட்டர் பக்கத்தில் தற்போது கட்சிக்கு தொடர்பற்ற பதிவுகள் வெளியாகி வருவதால் அதை ஒதுக்கி விட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்தது யார் என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்