பின்னர்,ஹேமாவின் அப்பா கங்காதரன் ,போலீஸ் ஸ்டேஷன் சென்று, ’லவ் ஜிகாத்’ ஆகச் செயல்பட்டு காதல் தன் மகளை செய்யுமாறு மிரட்டிய இளைஞரை கைது செய்ய வேண்டுமென புகார் அளித்திருந்தார்.
மேலும் கங்காதரன், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து தன் வீட்டில் தன் மகள் எழுதியிருந்த கடிதத்தை போலீஸார் விசாரணைக்காக எடுத்துச் சென்றனர். தற்போது அவற்றைக் காட்ட மறுக்கிறது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வந்து இளைஞர் மிரட்டல் விடுத்துள்ளார். அதனால்தான் என் மகள் தற்கொலை செய்தார் . அதனால் மகள் தற்கொலைக்கு காரணமான ஜாபரைக் கண்டுபிடித்து போலீஸார் உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.
அதில், தற்கொலை செய்துகொண்ட மாணவி ஒரே நேரத்தில் முகமது ஜாபர் மற்றும் அப்துல் அப்பாஸ் ஆகிய இரு இளைஞர்களைக் காதல் செய்துள்ளார். அப்பாஸைக் காதல் செய்தது ஜாபருக்குத் தெரியாது. ஒரு சமயம் இவர்களின் காதல் ஜாபருக்குத் தெரிந்தது.
அதனால் பிரச்சனை கிளம்பியது. இதனால் மனமுடைந்த ஜாபர் சாரோவின் வீட்டுக்குச் சென்று சாரோவை மிரட்டியுள்ளார். பின்னர் தான் இருவரை காதலிப்பது வெளியில் தெரிந்துவிட்டதால் அவர் தற்கொலை செய்துகொண்டார். மாறாக இது லவ் ஜிகாத் அல்ல. சாரோ இரண்டு இளைஞர்களுக்கும் அனுப்பிய ஐ லவ் யூ என்ற வாட்ஸ் அப் மெசேஞ் எங்களிடம் உள்ளது என்று தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.