காதல் மன்னன் படத்தில் ஷாலு ஷம்மு நடித்துள்ளாராம்! எந்த சீன்ல தெரியுமா!

வியாழன், 13 ஜூன் 2019 (10:39 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்ததோடு வசூல் ரீதியாகவும் நல்ல கலெக்க்ஷனை பெற்றது. 
 
இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இணைந்து நடித்த காமெடிகள் அனைத்தும் மிகவும் பிரபலமடைந்தது.  இந்த படத்தில் சூரியின் காதலியாகவும், ஹீரோயினுக்கு துணை நடிகையாகும் நடித்திருந்த நடிகை ஷாலு சம்மு. இவர் சமீபநாட்களாக ஆன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஆபாசமாக நடனம் ஆடும்  வீடியோக்களை தனது இன்ஸ்டராக்கிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 
 
இதனை கண்ட ரசிகர்கள் நீங்கள் ஐட்டம் டான்ஸ் ஆடுறவங்களா..படங்களில் அப்பாவியாக நடித்துவிட்டு நிஜத்தில் குடித்துவிட்டு இப்படி ஆட்டம் போடுறீங்களே... என்றெல்லாம் விமர்சித்து அந்த வீடியோவை ஷேர் செய்து வைரலாகினர். 

 
இந்த நிலையில் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த ஷாலு ஷம்மு , அஜித் நடித்த ‘காதல் மன்னன் ‘ திரைப்படத்தில் தான் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்துள்ளதாக கூறியுள்ளார். அந்த படத்தில் கதாநாயகிக்கு  நிச்சயதார்த்தம் நடப்பது போல ஒரு காட்சி வரும் அந்த காட்சியில் நானும் நடித்திருந்தேன் என்று கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்