பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா, வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆளும் தி.மு.க.வுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, அவர்மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மாற்றுக்கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யும் அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும், கரூரில் குறுகிய இடம் ஒதுக்கப்பட்டது ஏன், இது விபத்தா அல்லது வேறு பின்னணி இருக்கிறதா என்பது விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.