கோவை கார் வெடிப்பு: என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு!

வியாழன், 27 அக்டோபர் 2022 (15:44 IST)
கோவை கார் வெடிப்பு  சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைந்த்த நிலையில், மத்திய இதற்கு அனுமதி அளித்துள்ளது.

கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலியான நபரின் வீட்டிலிருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறை விசாரித்து வரும் நிலையில் தேசிய புலனாய்வு முகமையும் இது தொடர்பாக ஆவணங்களை திரட்டி வருகிறது. இந்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கார் வெடித்ததில் இறந்த முபினின் உறவினர் அஃப்சர் கான் என்பவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாயு முகமை விசாரிக்கும் என முதல்வர் ஸ்டாலின் பரிந்திரைத்த நிலையில், என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் பல உண்மைகள் தெரியவரும் என கூறப்படுகிறது.
 
Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்