எட்டு வயது சிறுமி,17,357 அடி உயரத்தில் உள்ள எவரெஸ்ட் மலை பேஸ் கேம்ப் பகுதிக்கு சென்று சாதனை!.

J.Durai

வியாழன், 30 மே 2024 (16:03 IST)
கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த ராம் குமார்,திவ்யா ஆகியோரின் மகள் யாழினி.எட்டு வயதான சிறுமி யாழினி நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்..இவரது தாயாரான திவ்யா கல்லூரி காலங்களில் மலையேற்ற சாகசங்களில் ஈடுபடுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.இந்நிலையில்,இவரது பயிற்சியாளர் ப்ரெட்ரிக் என்பவரது ஆலோசனையின் பேரில்,  எட்டு வயது சிறுமி யாழினியை எவரெஸ்ட் சிகரத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.. 
 
எட்டு பேர் கொண்ட குழுவில் எட்டு வயது மட்டுமே ஆன சிறுமி யாழினி தனது உறுதியான துணிவால் அவர்களுடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறியுள்ளார்..12 நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தின் 17,357 அடி உயரத்தில் அமைந்துள்ள  பேஸ் கேம்ப் எனும்  அடிப்படை முகாமை எட்டு வயதான யாழினி அடைந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்..இதனை தொடர்ந்து கோவை திரும்பிய யாழினியை அவரது பெற்றோர் உற்சாகமாக வரவேற்றனர்..
 
இது குறித்து சிறுமியின் பயிற்சியாளர் ப்ரெட்ரிக் கூறுகையில் ....
 
பொதுவாக இது போன்ற மலையேற்ற சாகசங்கள் செய்வதற்கு நுரையீரல் பயிற்சிகள் அவசியம் என கூறிய அவர்,ஆனால் சிறுமி யாழினி சிறு குழந்தைஙமுதலே நீச்சல் செய்யும் பழக்கம் இருந்ததால் எவரெஸ்ட் சிகரத்தில் அவரால் எளிதாக ஏற முடிந்த்தாக தெரிவித்தார்.மேலும் நல்ல பயிற்சிகளை யாழினிக்கு தொடர்ந்து அளித்தால்,விரைவில் சிறிய வயதில்  எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு சென்று சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்…
 
பெற்றோர்கள் இல்லாமல் தனியாக எட்டு வயது சிறுமி,எவரெஸ்ட் சிகரத்தின் 130 கிலோ மீட்டர் தூரத்தை  12 நாட்களில் சென்று  திரும்பி உள்ளதை  பலரும் பாராட்டி வருகின்றனர்.…

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்