3 ஆண்டுகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எந்த சாதனையையும் செய்யவில்லை: டாக்டர் ராமதாஸ்

Siva

வியாழன், 23 மே 2024 (14:00 IST)
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் எவ்வித சாதனையும் செய்யவில்லை. எனவும், மீதமுள்ள இரண்டு ஆண்டுகளில் சாதனை படைத்து முத்திரை பதிக்கவேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசின் திட்டமிட்டுள்ளதாகவும் மின் கட்டண உயர்வை கைவிடாவிட்டால் பாமக அதை எதிர்க்கும் என்றும் அந்த பேட்டியில் அவர் கூறினார்.
 
மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை என்றும் இது மக்களை ஏமாற்றும் செயல் என்று சொல்லலாம் என்றும் 510 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எந்த சாதனையையும் செய்யவில்லை என்றும் மீதமுள்ள இரண்டு ஆண்டுகளிலாவது சாதனை படைத்து முத்திரை படைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 
 
மேலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்று முதல்வர் கூறினாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். 
 
கடந்த 57 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் ஆட்சியில் புதிய அணைகள் கட்டப்படவில்லை என்றும் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணைகள் தான் இன்னும் உள்ளது என்றும் திமுக ஆட்சியில் 41 அணைகள் கட்டப்பட்டதாக கூறப்பட்டாலும் அவை அணைகள் அல்ல அந்த அணைகளில் ஒரு டிஎம்சி கூட கொள்ளளவு வைக்க முடியாது என்றும் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்