4 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பு: இருளில் மூழ்குமா இந்தியா?

வெள்ளி, 22 அக்டோபர் 2021 (08:59 IST)
கடந்த சில நாட்களாக நிலக்கரி பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி நாடு முழுவதும் இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
இந்தியா முழுவதும் 59 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும் இந்த அனல் மின் நிலையங்களில் தற்போது நான்கு நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது 
 
நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால் மின்சார உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக இந்தியாவின் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் என்று கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்