ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் முதல்வரோடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.