மீனம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில்: முதல்வர் அறிவிப்பு

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (10:55 IST)
மீனம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு செய்யப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த கேள்வி நேரம் நேரலையாக ஒளிபரப்பு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மீனம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படும் என்றும் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார் 
 
மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும் என்ற முதல்வரின் இந்த அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்