சேது சமுத்திர திட்டம்: தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் தனித் தீர்மானம்!

வியாழன், 12 ஜனவரி 2023 (11:41 IST)
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் சேது சமுத்திரத் திட்டம் குறித்த தீர்மானத்தை பதிவு செய்துள்ளார். 
 
சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தனி தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசியபோது அண்ணாவின் கனவு திட்டமான இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வரவேண்டும் என்றும் இந்த அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் தெரிவித்தார். 
 
சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் வர்த்தகம் பெருகும் என்றும் இலங்கையை சுற்றிக்கொண்டு கப்பல் போக வேண்டிய நீளம் குறையும் என்றும் மீனவர்கள் வாழ்வு செழிக்கும் என்றும் அவர் தனது அறையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்