10% இடஒதுக்கீட்டை நிராகரிக்கிறோம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

சனி, 12 நவம்பர் 2022 (13:01 IST)
10% இடஒதுக்கீட்டை நிராகரிக்கிறோம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
உயர்வகுப்பு ஜாதியினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நாங்கள் நிராகரிக்கிறோம் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது/ இந்த தீர்ப்புக்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று இது குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த கூட்டத்தில் ஏழை எளிய நலிந்த மக்களுக்கு அவர்களது வறுமையை போக்கும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் நாங்கள் சமூகநீதி தத்துவத்தின் உண்மை விழுமியங்களை சிதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
 
மேலும் முன்னேறிய ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான இந்த கூட்டத்தில் தீர்மானம் ஏற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்