திருவாரூர் விவசாயிகளுடன் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்!

செவ்வாய், 6 ஜூலை 2021 (20:55 IST)
திருவாரூர் விவசாயிகளுடன் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று திருவாரூர் செல்ல போகிறார் என்பதையும் அங்கு அவர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை சந்திக்கப் போகிறார் என்பதையும் பார்த்தோம் 
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திருவாரூர் மாவட்டம் வடுவூர் செருமங்கலம் என்ற பகுதியில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சென்றார்
 
அங்கு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்து உரையாடி அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின்போது நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்