எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம்: முதல்வர் உத்தரவு..

சனி, 23 டிசம்பர் 2023 (09:53 IST)
மிக்ஜாம் புயல் - மழையால் சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியான உத்தரவில் கூறியிருப்பதாவது:
 
 சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் கடந்த ஐந்தாம் தேதி ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்ற தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த எண்ணெய் கசிவால் மீன்பிடி தொழிலை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் இதனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். 
கூடுதலாக எண்ணெய் கசிவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண தொகையாக 12,500 வீதம் வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை சரிசெய்ய படகு ஒன்றுக்கு தலா ரூ.10000 விதம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொகை மீனவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில்  எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6500 குடும்பங்களுக்கு தலா 7500 வீதம் 5 கோடியே 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கிட முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 9001 குடும்பங்களுக்கு 8 கோடி 68 லட்சம் ரூபாய் வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்