சென்னையில் 98 % மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி வழங்கி விட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

சனி, 23 டிசம்பர் 2023 (08:10 IST)
சென்னையில் 98 சதவீதம் மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி வழங்கி விட்டோம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சென்னையில் நேற்று கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்து கொண்ட முதல்வர்  பள்ளி மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். அதன்பின் 2000 பேருக்கு மளிகை பொருட்களை வழங்கினார்

அதன்பின் அவர் பேசிய போது  ’சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவும் பகலும் உழைத்து வருகிறோம் என்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 வழங்கப்படும் என கூறிய நிலையில் சென்னையில் இரண்டு வாரங்களில் 98 சதவீதம் நிவாரண நிதி மக்களுக்கு சென்று அடைந்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.  மேலும் விரைவில் தென் மாவட்ட மக்களுக்கும் வெள்ள நிவாரண நி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தென் மாவட்டங்களை சந்தித்து ஆறுதல் கூறும் பொழுது அரசு இயந்திரங்கள்
செயல்பட்டதால் தான் எங்களை காப்பாற்றி உள்ளார்கள் என்று மக்கள் கூறினார்கள் என்றும் முதல்வர் பேசினார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்