இந்தியாவில் ஏற்பட்டுள்ள வெங்காய தட்டுப்பாட்டால் விலையும் அதிகரித்துள்ளது. வெங்காய தட்டுப்பாட்டை குறைக்க மத்திய அரசு எகிப்து மற்றும் துருக்கியிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக எகிப்து நாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூர் சந்தைகளில் விற்பனையாகி வருகிறது.
ஆனால் இந்திய வெங்காயத்தை விட காரம் குறைவாக இருப்பதாலும், அளவில் பெரியதாக இருப்பதாலும் மக்கள் எகிப்து வெங்காயத்தை வாங்க தயங்குவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கிலோ 70 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வரும் எகிப்து வெங்காயம் குறித்து மேலும் சிலர் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்று தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் விற்பனை பாதிக்க காரணம் என கருதப்படுகிறது.