குழந்தைகள் சாகக் காரணமான கோல்ட்ரிப் ஆலை மூடல்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

Prasanth K

வியாழன், 9 அக்டோபர் 2025 (11:54 IST)

மத்திய பிரதேசத்தில் 20 குழந்தைகள் பலியாக காரணமாக இருந்த கோல்ட்ரிப் சிரப் ஆலையை மூடுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

 

மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்த 20 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உள்ள கோல்ட்ரிப் ஆலையில் மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் நடத்திய சோதனையில் அந்த சிரப்புகள் கலப்படம் செய்யப்பட்டவை என உறுதியானது. இதற்கிடையே மத்திய பிரதேச போலீஸார் குழந்தைகள் பலியான வழக்கில் மருந்து நிறுவன உரிமையாளரை கைது செய்துக் கொண்டு சென்றனர்.

 

அதை தொடர்ந்து தற்போது காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த சிரப் ஆலையை மூடுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் “கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை தற்காலிகமாக தற்போது மூடப்படுகிறது. விசாரணைக்கு பிறகு ஆலையை முழுவதுமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

 

கோல்ட்ரிப் மருந்தை ஆய்வு செய்தபோது அதை சரியாக செய்யாத 2 தர ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்