பள்ளி மாணவியுடன் உல்லாசம் - மதபோதகர் கைது

வியாழன், 1 பிப்ரவரி 2018 (14:47 IST)
பள்ளி மாணவியுடன் உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்துள்ள ஜல்காம்பாறை எனும் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 1 படித்து வந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள அப்துல்லாபுரத்தை சேர்ந்த தீபக்குமர்(47) என்பவரோடு அந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. தீபக்குமார், ஜலகாம்பாறை அருகே உள்ள மிட்டூர் கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதகராக இருக்கிறார்.
 
தேவலாயத்திற்கு அந்த மாணவி சென்ற போது மதபோதகரோடு பழக்கம் ஏற்பட்டு, பல இடங்களுக்கு அவர்கள் ஒன்றாக சுற்றியுள்ளனர். அந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் அந்த மாணவியை சென்னைக்கு அழைத்து வந்த மதபோதகர், திருமணம் செய்து கொள்வதாய் கூறி அப்பெண்ணை பாலியல் இச்சைக்கு உட்படுத்தியுள்ளார்.
 
அதன்பின் தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த சிறுமி வற்புறுத்திய போது, மதபோதகர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், சம்பவத்தை வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
 
இதையடுத்து, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மதபோதகர் தீபக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்