இந்நிலையில் திண்டுக்கல், நாமக்கல், சிவகங்கை, கரூர், திருவள்ளூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு அரசின் இணை மானியம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு அரசின் இணை மானியமாக ரூ. ஒரு கோடியே பத்து லட்சம் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.