பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் அறிவியல் கண்காட்சி

சனி, 19 நவம்பர் 2022 (22:16 IST)
பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்விக் குழுமத் தாளாளர் S.மோகனரங்கன்,  செயலர் பத்மாவதி  மோகனரங்கன்,  அறங்காவலர் M.சுபாஷினி ஆகியோர் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
 
பரணிக் கல்வி நிறுவனங்களின் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன் கூறுகையில், “இன்று நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் மழை, பொது இடங்களான மருத்துவமனை, சந்தை, பள்ளி, வங்கி, ரயில் நிலையம், தபால் நிலையம் குறித்த பொது அறிவு, காலநிலை, மர வகைகள், நில வகைகள், மரங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம், மண் வகைகள், வீடு வகைகள், திருக்குறளில் அறிவியல் போன்ற பல்வேறு தலைப்புகளில் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கண்காட்யில் தொடக்கநிலை வகுப்புகளில் பயிலும் சுமார் 853 இளம்  விஞ்ஞானிகளால் 158 அறிவியல் ஆய்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன. இளம் மாணவர்களிடையே குழு உணர்வு, தலைமை பண்பு, அறிவியல் மனப்பான்மை, ஆங்கிலத்தில் பேசும் திறன் ஆகியவற்றை வளர்க்கும் வகையில் 15-வது ஆண்டாக அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது” என்று கூறினார். மேலும் இதன் ஒரு பகுதியாக மாணவர்களின் ஓவியம், கலை படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.
 
அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பரணி பார்க் பள்ளி முதல்வர் K.சேகர், துணை முதல்வர்கள்  G.நவீன்குமார், K.கௌசல்யா, P.ரேணுகாதேவி, K.மகாலட்சுமி, அகடமிக் முதல்வர் P.ரகுநாதன், ஒருங்கிணைப்பாளர் V.பானுப்பிரியா மற்றும் இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர். இக்கண்காட்சியில் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு மாணவர்களின் படைப்புகளை கண்டு வியந்து வெகுவாக பாராட்டினர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்