நீடிக்கும் ஸ்டிரைக்: முதலமைச்சர் அவசர ஆலோசனை

செவ்வாய், 29 ஜனவரி 2019 (13:44 IST)
ஆசிரியர்களின் ஸ்டிரைக் இன்னும் நீடித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின் பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்திருந்தது.
 
இதற்கிடையே சற்றுமுன்னர்  பள்ளி கல்வித்துறை  அதிகாரி  95 சதவீத உயர்நிலை மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர் என தெரிவித்தார். 

 
ஆனால் அதில் உண்மை இல்லை என கூறும் ஆசிரியர்கள் பலர், தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு எங்களை அழைத்து பேசவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் புரட்சி வெடிக்கும் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
 
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்