அமைச்சர்கள் படையுடன் டெல்டாவில் களமிறங்கிய எடப்பாடியார்!! அனல்பறக்கும் மீட்புப்பணிகள்

புதன், 28 நவம்பர் 2018 (15:23 IST)
அமைச்சர்கள் படையுடன் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடச் சென்ற முதலமைச்சர் முழு வீச்சில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.
கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. லட்சக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. பல்வேறு இடங்களிலிருந்து மக்களுக்கு நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டு வருகிறது. மின் கம்பங்களை சீர் செய்ய மின் ஊழியர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட டெல்டா மாவட்டங்களுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி கனமழை காரணமாக பாதியிலேயே திரும்பினார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் நேற்றிரவு ரயில் மூலம் திருவாரூர் சென்ற முதலமைச்சர் காலை முதல் கஜா பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஓ. எஸ்.மணியன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உள்ளனர்.
 
பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து நிவாரண உதவிகளை வழங்கினார். மின் கம்பங்களை சீர் செய்ய துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ச்சியாக மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். மக்களுக்கு உதவ அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளை எடுக்கும் என உறுதிபட கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்