இந்த நிலையில் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாளை அல்லது நாளை மறுநாள் தமிழகம் வருவார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மத்திய குழுவே பார்வையிட்டு சென்ற பின்னர் பத்து நாட்கள் கழித்து இனிமேல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து என்ன பயன்? என டெல்டா பகுதி மக்கள் அதிருப்தியுடன் காணப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.